செய்திகள்

முட்டை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முட்டை விலை உயர்வை கண்டித்து மதுரையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாலை மலர்

மதுரை:

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மற்றும் பண்ணையாளர்கள் முன்பு வாரத்துக்கு இருமுறை முட்டை விலையை நிர்ணயம் செய்தார்கள்.

தற்போது தினந்தோறும் தங்கத்தின் விலை போல் முட்டை விலையை அன்றாடம் நிர்ணயம் செய்வதை கண்டித்து மதுரையில் இன்று மதுரை மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பேச்சியம்மன் படித்துறை ஆறுமுச்சந்தி சந்திப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ராஜ கோபால் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கனகராஜ், செயலாளர் பாரதி, துணை செயலாளர் கல்யாண்குமார், பொறியாளர் துரைபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் முட்டை விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷமிட்டனர்.