செய்திகள்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாலை மலர்

`நீட்' தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன நிலையில், தி.மு.க. தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.