முதலமைச்சர் பழனிசாமி 
செய்திகள்

சென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்துப் பேசினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.