செய்திகள்

எடப்பாடி அணி தீர்மானம்: ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

எடப்பாடி அணியினர் அதிரடியாக இன்று நிறைவேற்றியுள்ள தீர்மானத்தையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

மாலை மலர்

டி.டி.வி.தினகரன் நியமனம் சட்டவிரோதம், அவர் அறிவித்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்று எடப்பாடி அணியினர் அதிரடியாக இன்று தீர்மானம் நிறைவேற்றினர்.

தலைமை கழகத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஓ.பி.எஸ். முகாம் பரபரப்படைந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே அ.தி.மு.க. அணிகள் இணையும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இப்போது தினகரனை ஓரம் கட்டி விட்டதால் இணைப்புக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.