சென்னை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பாணாதுறை குளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மணலி புதுநகரில் 78 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 2 சிறுவர் விளையாட்டு பூங்காக்கள்; ஆலந்தூர் மண்டலம், திருவள்ளுவர் நகர், நாதமுனி தெருவில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பூங்கா;
மணப்பாக்கம், ஆற்காடு சாலையில் 54 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பூங்கா; மணப்பாக்கம், ரிவர்வியூ காலனி பிரதான சாலையில் 55 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பூங்கா; பெருங்குடி மண்டலம், அண்ணா நெடுஞ்சாலை யில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பூங்கா;
துரைப்பாக்கம் ஆனந்தா நகரில் 93 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பூங்கா; சோழிங்கநல்லூர், குமாரசாமி நகர் பிரதான சாலையில் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூங்கா; பழைய வண்ணாரப்பேட்டையில் 7 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல அலுவலகக் கட்டடம்; அடையாறு மண்டலம், கோதாவரி தெருவில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்;
மதுரை மாநகராட்சி, ஆனையூர் மற்றும் துரைசாமி நகர் பகுதிகளில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 2 பூங்காக்கள்; பட்டுக்கோட்டை நகராட்சி, வளவன்புரத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி; என மொத்தம் 18 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 14 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், சதுர்வேதி மங்கலம் ஊராட்சியுடன் சிலநீர்பட்டியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார்.
மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக 2003ஆம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தீரஜ்குமாருக்கும், 2005ஆம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முக மணிக்கும், 2014ஆம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லிக்கும், 2015ஆம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமாருக்கும், 2017ஆம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத்துக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.