செய்திகள்

சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்

சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். #MakeInIndia4Defence

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தினை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி. சம்பத், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணுவ தளவாட உற்பத்தியில் தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

அப்போது, சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை  முக்கியத்துவம் கொடுப்பது  வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

ஹெலிகாப்டர் தொழிற்சாலையை தமிழகத்தில் சேலத்தில் அமைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #MakeInIndia4Defence #tamilnews

SCROLL FOR NEXT