அவனியாபுரம்:
திண்டுக்கல்லில் நேற்று நடந்த அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார். இன்று மதியம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும் என்று மதுசூதனன் கூறியுள்ளாரே. உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.
அதற்கு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது. அப்படி ஒரு சூழ்நிலையும் வராது என்றார்.