முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை மலர்

சென்னை

கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.