செய்திகள்

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது பிரதமரை அவர் சந்திக்கலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவினை சரிசெய்து இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை பெறுவதற்கு இரு அணிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசலாம் என்றும் கூறப்படுகிறது.