செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கோவை வருகை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.

கோவை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.

அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் கார் மூலம் அவரது சொந்த ஊரான எடப்பாடி செல்கிறார்.

நாளை(சனிக்கிழமை) காலை ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மாலையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28-ந் தேதி இரவு சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT