ஆர்.ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியபோது எடுத்த படம். 
செய்திகள்

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்ட ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான விருது - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்ட ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாலை மலர்

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்ட ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்‌ஷா பதக்” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.

இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்‌ஷா பதக்” விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆர்.ஸ்ரீதருக்கு “ஜீவன் ரக்‌ஷா பதக்” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.

ஆர்.ஸ்ரீதர், கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-