செய்திகள்

சேலத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் - முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு ரூ.80 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #MGR #Jayalalithaa

சேலம்:

சேலம் அண்ணா பூங்காவில் 2100 சதுர அடி பரப்பளவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். #MGR #Jayalalithaa