சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாளான 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, அ.தி.மு.க. (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) தலைமை நிலையச் செயலாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.