செய்திகள்

சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை நேற்று மாலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் என்று சந்தித்து பேசினார்.

மாலை மலர்

சென்னை:

தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை நேற்று மாலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் என்று சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் கடைசியில் நடைபெற வாய்ப்பு உள்ளதால் இதுபற்றி இருவரும் விவாதித்திருக்கலாம்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் கோர்ட்டு தீர்ப்பு இன்னும் 1 வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விவாதித்து இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.