பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் நமோ டிவி தொடங்கப்பட்டது. இந்த டிவியின் லோகோவில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது. மோடியின் பிரசாரம் தொடர்பான செய்திகளை இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நமோ டிவி தொடங்க அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இரண்டு கட்சிகளும் புகார் அளித்தன.