செய்திகள்

ரெயில்வே டீ கப்பில் மோடி வாசகம் - ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ரெயில்வே டீ கப்பில் மோடி வாசகம் மற்றும் டிக்கெட்டுகளில் மோடி படம் அச்சிடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #LSPolls #ElectionCommission

மாலை மலர்

புதுடெல்லி:

ரெயில்வே டிக்கெட்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்டு இருந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கூறி இருந்தது.

இதேபோல், ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என அச்சிடப்பட்டிருந்த விளம்பரத்திற்கும் எதிர்ப்பு வலுத்தது.

பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்த நிலையில், ரெயில்வே டிக்கெட் மற்றும் தேநீர் கோப்பைகளில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், ரெயில்வே துறைக்கு தேர்தல் கமி‌ஷன் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கடந்த 10-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியானவுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ரெயில்வே துறையின் இத்தகைய செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். எனவே இதற்கு விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. #LSPolls #ElectionCommission