புதுடெல்லி:
மத்தியப்பிரதேசம் மாநிலம் சிஹோரா மாவட்டத்தின் ஜபல்பூர் தொகுதியில் ஏப்ரல் 23-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த பிரசாரத்தில் பேசிய ராகுல், கொலை குற்றவாளி பா.ஜனதா தலைவர் அமித் ஷா. எவ்வளவு பெருமைக்குரியது? என கூறினார்.
இதனையடுத்து ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்துள்ளார். அவர் பேசியது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக தலைவர் அமித் ஷாவை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிகளை மீறியது அல்ல என கூறியுள்ளது. #RahulGandhi #ECNotice