செய்திகள்

இரட்டை இலை விவகாரம்: விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணையை ஒத்திவைப்பதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணையை ஒத்திவைப்பதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும், டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.

இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே, ஐந்து கட்டமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று ஆறாவது கட்டமாக விசாரணை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவம்பர் 10-ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்க முடியாது என்பதால் கூடுதல் கால அவகாசம் கேட்க முடிவு எடுக்கப்படுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.