செய்திகள்

அந்தமான் தீவு பகுதிகளில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. #Earthquake #AndamanIslands

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.