செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்டாவர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்டாவர் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் ரிக்டரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #JammuAndKashmir #KishtwarEarthquake

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரவு 8 மணியளவில் ரிக்டரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்டாவர் பகுதியில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7:53 மணிக்கு கிஷ்டாவர் பகுதியில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 43.92 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. #JammuAndKashmir #KishtwarEarthquake #tamilnews

SCROLL FOR NEXT