செய்திகள்

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #AndamanEarthquake

நிகோபார் தீவுகளில் இன்று காலை 6.04 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.