ஈட்டா நகர்:
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் திபாங் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திபாங் சமவெளி மாவட்டத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
மாலை 5.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாகவும், இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.