நிலநடுக்கம் 
செய்திகள்

குஜராத் ராஜ்கோட் பகுதியில் நிலநடுக்கம் - 5.8 ஆக பதிவு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

குஜராத்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கிமீ தொலைவில்  ஏற்பட்டதாக நில நடுக்கத்திற்கான தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ராஜ்கோட்டின் வடமேற்கு பகுதியில் 122 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை

SCROLL FOR NEXT