பேரணாம்பட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் உள்ள சுவர், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி. 
செய்திகள்

வேலூர் அருகே நிலநடுக்கம் - சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று லேசான நிலநடுக்கத்தால் வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டன.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஜார்வீதி, திரு.வி.க.நகர், லால்மசூதிதெரு, ஒத்தவாடை தெரு, டிப்புசாதெரு, ஏரிகுத்திமேடு, காமராஜர் நகர், மதனிதெரு, தரைக்காடு பகுதியில் இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் லேசாக அதிர்வு ஏற்பட்டது. 2-வது தடவை பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. தண்ணீர் இருந்த பாத்திரங்கில் அதிர்வு தெரிந்தது. இதனை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

ஏரிகுத்தி மேட்டில் பயாஸ்அமகது என்பவரது வீட்டில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டது. ஒத்தவாடை தெருவில் காபீர் என்பவர் வீட்டில் குளியலறையில் இருந்த தண்ணீர் வாளிகள் உருண்டன.

இதேபோல் மேல்பட்டி, செண்டத்தூர் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

பேரணாம்பட்டு தாசில்தார் மகாலிங்கம் நில அதிர்வு உணரப்பட்ட பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். #tamilnews

SCROLL FOR NEXT