ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு- அதிமுக கண்டனம்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் அரசியலை தொடருவது கண்டனத்திற்கு உரியது என அதிமுக கூறி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடிக்கு சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் அரசியலை தொடருவது கண்டனத்திற்கு உரியது; அலை கடல் ஓய்வதுமில்லை, அதிமுக சாய்வதுமில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.