டுட்டீ சந்த் 
செய்திகள்

விளையாட்டுத்துறைக்கான விருது: ஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் பெயரை நிராகரித்தது அமைச்சகம்

ஹர்பஜன் சிங், டுட்டீ சந்த் ஆகியோர் பெயர் விளையாட்டுத்துறைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அமைச்சகம் அதை நிராகரித்துள்ளது.

மாலை மலர்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அம்மாநிலம் சார்பில் பரிந்து செய்யப்பட்டது.

அதேபோல் ஒடிசாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டுட்டீ சந்தின் பெயர் அம்மாநில சார்பில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இருவரின் பெயர்களையும் நிராகரித்துள்ளது விளையாட்டுதுறை அமைச்சகர். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இவரும் பெயர்களும் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னர் பரிந்துரை செய்யப்பட்டது’’ என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.