இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்குடன் நேற்றைய 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் களம் இறங்கியது.
ஆனால், இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இலங்கை அணியின் பெரேராவின் சுழலில் பாகிஸ்தான் 52 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. இதனால் இலங்கை எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை இருந்தது.
இந்நிலையில் 6-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் கேப்டன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இலங்கை வீரர்கள் இரண்டு மூன்று வாய்ப்புகளை வீணடித்தனர். இதை இருவரும் சரியான பயன்படுத்தி ரன்கள் குவித்தனர்.
இதனால் பாகிஸ்தான் சேஸிங்கை நோக்கி வீறுநடை போட்டது. இருவரும் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட்டுக்கள் ஏதும் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஆசாத் ஷபிக் 86 ரன்னுடனும், சர்பிராஸ் அஹமது 57 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.