செய்திகள்

குடிபோதையில் தகராறு: வாலிபர் மீது தாக்குதல் - ரவுடி கைது

குடிபோதையில் தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலித் தொழிலாளி. அமைந்தகரை பி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜூல்லா என்கிற சதிஷ் என்பவருடன் சேர்ந்து அமைந்தகரை தனியார் வணிக வளாகம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்தினார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இதில் ஆத்திரமடைந்த ஜூல்லா சாலையில் கிடந்த செங்கல்லால் முருகன் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த முருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜூல்லாவை ஜூல்லா மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது.