போராட்டம் 
செய்திகள்

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம்- பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும், குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, பேரூராட்சியில் உள்ள பழைய இரும்பு மற்றும் தளவாட பொருட்களை டெண்டர் விடாமல் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினர் குணசீலன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.