செய்திகள்

வெளிநாட்டு மொழிகள் கற்கும் திறனை ஆல்கஹால் வளர்க்கும்: ஆய்வில் தகவல்

ஆல்கஹால் மனிதர்கள் வெளிநாட்டு மொழிகளை மிக சுலபமாக கற்றுக் கொள்ளும் திறனையும், பேசும் திறனையும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாலை மலர்

லண்டன்:

மது குடிப்பவர்களின் அறியும் திறன் மற்றும் ஆற்றல் குறையும். இது பொதுவான கருத்து. ஆனால் அதில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து அச்ச உணர்வை போக்குகிறது.

அதன் மூலம் வெளிநாட்டு மொழிகளை மிக சுலபமாக கற்றுக் கொள்ளும் திறனும், பேசும் திறனும் அதிகரிக்கும். இது குறித்த ஆய்வை லிவர்பூல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் நடத்தினார்கள்.

அதில் குறைந்த அளவு ஆல்கஹால் அருந்தினால் மட்டுமே இத்திறனை வளர்க்க முடியும் என ஆய்வு நிபுணர் குழுவின் தலைவர் கெர்ஸ்பெர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது 70 கிலோ எடையுள்ள ஆண்களுக்கு குறைந்த அளவிலான அதாவது 460 மி.லி பீர் வழங்கப்பட்டது. அவர்கள் வெளிநாட்டு மொழியை மிக எளிதாக பேசினார்கள்.

இத்தகவல் சைக்கோ பார்மாலஜி என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.