தற்கொலை 
செய்திகள்

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தற்கொலை

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை மோகன்நகர் 2-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது47). இவருக்கு ராதா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஆட்டோ தொழில் செய்து வந்த மதியழகன் பின்னர் அந்த தொழிலை கைவிட்டு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 15 நாட்களாக மதியழகன் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். அதுபோல் நேற்றும் மதியழகன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி ராதா கண்டித்தார். 2 மகள்கள் இருக்கும்போது இதுபோல வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வருகிறீர்களே என திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மதியழகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின்அறையில் அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT