செய்திகள்

சென்னையில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னையில் வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். #GoldSeized #Chennai #DirectorateofRevenueIntelligence

மாலை மலர்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இருந்து பல்வேறு அரிய பொருட்கள் கடல் மார்க்கமாகவும், விமான போக்குவரத்து மூலமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. அதனை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவற்றை தடுப்பதற்கும், கடத்தப்பட்டவற்றை பறிமுதல் செய்வதிலும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுமார் 11.15 கிலோ எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.