செய்திகள்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு உடை காரணம் அல்ல - நிர்மலா சீதாராமன்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அவர்களின் உடைதான் காரணம் என்றால் வயதில் மூத்த பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்படுவது ஏன்? என நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பியுள்ளார். #NirmalaSitharaman #WomenAbuse

புதுடெல்லி:

டெல்லியில், இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நாட்டில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்களின் உடை காரணம் அல்ல என்றும் உடை காரணம் என்றால் வயது மூத்த பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்படுவது ஏன்?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ‘பெண்கள் அவர்களது உறவினர்களாலும், நண்பர்களாலுமே அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்றும் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பான விசயங்களில் அரசு அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்து பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஏழு சம்பவங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், நண்பர்களால் நடத்தப்படுகின்றன’ எனவும் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #WomenAbuse

SCROLL FOR NEXT