செய்திகள்

`நாக்' ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

டாங்கி மூலம் துல்லியமாக குறிவைத்து அழிக்கும் `நாக்' ஏவுகணையை ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

டாங்கி மூலமாக எதிரிகளின் இலக்கை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் `நாக்' ஏவுகணையை ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. இதில் இன்று ஏவப்பட்ட நாக் ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை முற்றிலுமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது தலைமுறையை சேர்ந்த இந்த நாக் ஏவுகணை, அதிநவீன தொழில்நட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதில் இன்ப்ராரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிரை உள்ளுணரும் ரேடார் உள்ளது. உலகிலேயே ஒரு சில நாடுகளிடமே இத்தகைய அதிநவீன தொழில்நுட்ப ஏவுகணைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.