ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 
செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி

கரூர் மாவடட்ம், லாலாபேட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்கம் 2022 முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

மாலை மலர்

கரூர் மாவடட்ம், லாலாபேட்டை கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்கம் 2022 முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனம் ஆகிய தலைப்புகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். இதில் முதல் பரிசை அபிநயா, 2-வது பரிசை தாரணி, 3-வது பரிசை பிரதீஸ் ஆகியோர் பெற்றனர்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நடுவராக ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ராமலிங்கம், வாசகர் வட்ட தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் செயல்பட்டனர். இதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மணி, புரவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டிக்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.