செய்திகள்

மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை மற்றும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்:

காவிரி பிரச்சினை மற்றும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் தங்கபிரகாசம் மற்றும் திராவிடர் கழக, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT