சைக்கிளில் வந்து மந்திரி பொறுப்பை ஏற்ற ஹர்ஷ் வர்தன் - டெல்லியில் சுவாரஸ்யம்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தனது வீட்டில் இருந்து இன்று சைக்கிளில் வந்து அலுவலகப் பணிகளை கவனிக்க தொடங்கினார்.
மாலை மலர்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 30-ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டார்.