செய்திகள்

தேர்தல் நடத்தை விதி - மினி பஸ்களில் ‘இரட்டை இலை’ படம் மறைப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் மாநகர அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் மினி பஸ்களில் இடம் பெற்றிருந்த இரட்டை இலை படம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. #LSPolls

மாலை மலர்

சென்னை:

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், பெயர்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் மாநகர அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் மினி பஸ்களின் பின் பகுதியில் இரட்டை இலை படம் பச்சை வண்ணத்தில் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அப்போது அது இரட்டை இலை சின்னம் அல்ல என்று மறுத்தனர்.

இந்த நிலையில் இப்போது மினி பஸ்களில் இடம் பெற்றிருந்த இரட்டை இலை படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர்.

அனைத்து பஸ்களிலும் வெள்ளை வண்ண ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. #LSPolls