செய்திகள்

திருமண நாளில் இரட்டை சதம்: மனைவிக்கு அர்ப்பணித்த ரோகித் சர்மா

மொகாலியில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாளில், தனது திருமண நாளில் பதிவு செய்த இரட்டை சதத்தை ரோகித் சர்மா தனது மனைவிக்கு அர்ப்பணித்தார்.

மாலை மலர்

65 பந்தில் அரைசதம் அடித்த ரோகித், 115 பந்தில் சதம் அடித்தார். அதில் 9 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 133 பந்தில் 150 ரன்கள் எடுத்த ரோகித், 151 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இதில் 13 பவுண்டரி, 11 சிக்சர்கள் அடங்கும்.

நேற்று ரோகித் சர்மாவின் திருமண நாள். அவரது மனைவி ரித்திகா போட்டியைக்காண மைதானம் வந்திருந்தார். இரட்டை சதம் அடித்ததும் மனைவியை நோக்கி முத்தம் கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். அவரது மனைவி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.

போட்டி முடிந்த பின்னர் ரோகிர் சர்மா கூறுகையில் ‘‘இந்த இரட்டை சதத்தை திருமண நாளில் அடித்தது சந்தோசம். இதை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சிறந்த திருமண பரிசாக இதை அவர் நினைப்பார்’’ என்றார்.