ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வாத் 
செய்திகள்

விசாரணையின்றி ஒருவரை கொல்வது நாட்டிற்கு களங்கம் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

சட்டரீதியான விசாரணை இன்றி ஒருவரை கொல்வது நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். இந்தியாவில் அதை நடைமுறை படுத்தக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

விஜயதசமி விழா நாடு முழுவதும் விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.  சார்பில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

இந்தியாவில் ஜனநாயகம் என்பது இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று அல்ல, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு  பாரம்பரியம். இந்தியாவில் 2019 தேர்தல்கள் சுமுகமாக நடத்தப்படுமா என்பதை அறிய உலகம் ஆர்வமாக இருந்தது. ஆனால் சுமூகமாக  நடைபெற்று பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார்.  

மோடி மற்றும் அமித் ஷாவின் முயற்சியால் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பாராட்டுக்குரியதாகும்.   எல்லைப்பகுதியில் முன்பு இருந்ததை விட தற்போது அதிக பாதுகாப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.  

கடலோர பகுதிகளில், பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் கடல்  எல்லையில், குறிப்பாக தீவுகளில் கண்காணிப்பு பணிகள் ஆகியவற்றை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும் விசாரணையின்றி சட்டவிரோதமாக ஒருவரை கொல்வது நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்துவதாகும். அதை இந்தியாவில்  நடைமுறைப்படுத்த கூடாது. இது இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். 

இவ்வாறு அவர் பேசினார்.