கோப்புபடம் 
செய்திகள்

கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது - முதன்மை கல்வி அலுவலர் தகவல்

தேனி மாவட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தேனி:

தமிழக அரசு அரசாணை நிலை எண் 199 வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை நாள்.20.4.2020ன்படி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசால் பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் பிறவாரியம் (சி.பி.எஸ்.சி., சி.ஐ.எஸ்.சி.இ., சி.ஏ.ஐ.இ., ஐ.பி.,) பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டிற்கான நிலுவை கட்டணம் மற்றும் 2020-2021ம் கல்வியாண்டிற்கான 100 சதவீதம் கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைமீறி கல்வி கட்டணம் செலுத்த கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகாரினை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கலாம் என்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயு தபாணி தெரிவித்துள்ளார்.