மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கழுதைகள் விற்பனை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்துநாள் விழாவில் உள்ளூர் கழுதைகள் தவிர அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கழுதைகளின் ரகம், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விற்பனை செய்பவர்கள் ஒரு பெயரை சூட்டுவதுண்டு. அவ்வகையில், இந்த திருவிழாவில் சில கழுதைகளுக்கு ஜி.எஸ்.டி., பாகுபலி, சுல்தான், ஜியோ என பெயரிடப்பட்டிருந்தது.
இதில் குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இரு கழுதைகளுக்கு (கற்பழிப்பு வழக்கில் சமீபத்தில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சாமியார்) பாபா குர்மீத் ராம் ரகீம் சிங் என்றும், (அவரது வளர்ப்பு மகளான) ஹனி பிரீத் என்றும் பெயரிடப்பட்டிருந்தது, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.