செய்திகள்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: தெயிம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டோம்னிக் தெயிம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மாலை மலர்

பாரிஸ்: 

46-வது சீசன் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. 

இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோம்னிக் தெயிம், ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சைகை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை தெயிம் 6-4 என கைப்பற்றினார். அதன்பின்னர் நடந்த இரண்டாவது சுற்றை கோஜோவ்சைக் 7-6 என கைப்பற்றினார்.

இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது சுற்றை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் தெயிம் வென்றார். இதன்மூலம் 6-4, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற தெயிம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 நிகோலஸ் மஹூட் 

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் எட்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் கரீனோ பஸ்டா, பிரான்சின் நிகோலஸ் மஹூட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் மஹூட் 6-4, 6-1 நேர் செட்களில் பஸ்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

கரீனோ பஸ்டா