இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. ஆனால், ஐசிசி-யால் நடத்தப்படும் உலகளாவிய தொடரில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 2015-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மட்டும் அரையிறுதிக்கு முன்னேறியது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கிடையில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த ரஸல் டொமிங்கோவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த பதவிக்கு மீண்டும் டொமிங்கோ விண்ணப்பம் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது. கடந்த மாதம் 11-ந்தேதி மீண்டும் விண்ணப்பம் செய்வது குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளதாக டொமிங்கோ கூறியுள்ளார். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 16-ந்தேதியாகும். அதற்கு முன்னதாகவே டொமிங்கோ விண்ணப்பம் செய்துள்ளார்.
இதுகுறித்து டொமிங்கோ கூறுகையில் ‘‘நான் என்னுடைய விண்ணப்பத்தை அனுப்பியுள்ளேன். அதனைத் தொடர்ந்து நேர்காணலும் நடந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.