தேங்காய் சிரட்டையில் வடிவமைக்கப்பட்ட பொம்மை. 
செய்திகள்

தேங்காய் சிரட்டையில் பொம்மை

திருப்பூர் பேஷன் டிசைன் கல்லூரி மாணவர் தேங்காய் சிரட்டையில் பொம்மைகளை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லூரியில் அப்பேரல் பேஷன் டிசைன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் நித்திஷ்.பல்லடத்தை சேர்ந்த இவர் தேங்காய் சிரட்டை மற்றும் காகிதத்தை பயன்படுத்தி அழகிய பொம்மைகளை வடிவமைத்துள்ளார்.

சிரட்டைகளை ஒட்டவைத்து பொம்மையின் தலை, வயிற்றுப்பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. காகிதத்தால், கண், காது, கை மற்றும் கால்கள் வடிவமைத்து அழகிய கரடி பொம்மையை தயாரித்துள்ளார்.

இதுகுறித்து நித்திஷ் கூறியதாவது:-

கழிவு பொருட்களில் கலைநயமிக்க கைவினை பொருட்களை உருவாக்குவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. அந்தவகையில் தேங்காய் சிரட்டை, கழிவு காகிதத்தை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பும் கரடி பொம்மை உருவாக்கியுள்ளேன்.அக்ரலிக் பெயிண்ட் பயன்படுத்தி வர்ணம் தீட்டியுள்ளேன். மற்ற பொம்மைகள் போலவே இந்த சிரட்டை பொம்மையை  குழந்தைகளிடம் விளையாட கொடுக்கலாம். தூக்கி வீசி விளையாடினாலும் கூட சேதமாகாது என்றார்.