போலீசார் விசாரணை 
செய்திகள்

மர்ம பொருளை கடித்த நாய் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே மர்ம பொருளை கடித்து நாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவரது வீட்டில் அருகே அவர் வளர்த்து வந்த நாய் நேற்று இரவு மர்ம பொருளை கடித்து உயிரிழந்தது. இன்று காலை பார்த்தபோது நாய் உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாய் கடித்த மர்மபொருள் நாட்டு வெடிகுண்டா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம பொருளை கடித்து நாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.