மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, நேசனேரி, ரெங்கபாளையம் கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்கள் அடிக்கடி குடிநீர் தேடி, சாலை பகுதிக்கு வருகின்றன.
இன்று காலை ராயபாளையம் முனியாண்டி கோவில் அருகே, குடிநீர் தேடி புள்ளிமான் வந்தது. அந்தமானை, நாய்கள் விரட்டி, விரட்டி கடித்தன. இதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.