திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் யது விஜய்கிருஷ்ணன், ‘நரகத்தின் 21 மாதங்கள்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். 78 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில், எமர்ஜென்சி காலத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகளால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதல் பெற விஜய்கிருஷ்ணன் விண்ணப்பித்துள்ளார். படத்தை பார்த்த மண்டல தணிக்கை அலுவலர், போலீசார் இப்படிதான் சித்திரவதை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார். மேலும், இது உண்மையெனில் அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வாங்கி வர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறும், விஜய் கிருஷ்ணன், புதுடெல்லியில் இந்த ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால், தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுக்கின்றது என்று ஆதங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.