பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் 
செய்திகள்

டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் - 4 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய 8 மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மாலை மலர்

சென்னை:

பட்ட மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4 நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இன்று அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில் ராஜ் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. இவர் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 8 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.