அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது என்று இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பொதுமக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்களாக இருக்கும் மருத்துவர்களுக்கு ஆயுள், சராசரி பொதுமக்களை விட குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது. இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொதுமக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.
தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொதுநலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.